Sunday, January 30, 2011

ஸ்ரீ தியாகராஜா ஸ்வாமிகள் ஆராதனை!

கர்நாடக சங்கீதத்திற்கு ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் கீர்த்தனைகள் தான் ஆணி வேர் என்று சொன்னால் மிகையாகாது. இன்றைக்கு பிரபலமாக இருக்கும் நல்ல சம்பாத்யத்தில் இருக்கும் வித்வான்களுக்கு பிழைப்பாதாரமாக விளங்குவது ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் கீர்த்தனைகள் தான். ஆனால் அவர்கள் எல்லாம் எந்த அளவுக்கு ஸ்ரீ த்யாகராஜ சுவாமிகளுக்கு நன்றி பாராட்டுகிறார்கள், நினைத்து பார்கிறார்கள் என்று தெரியவில்லை. வருடத்துக்கு ஒருநாள் ஆராதனையின் போது தலை காட்டுவதோடுசரி. இதை நான் சொல்லவில்லை கல்கி அந்த காலத்தில் அதாவது முப்பது ஆண்டுகளுக்கு முன்னால்எழுதியது. ஆனால் வேலூர் எ.ஆர்.சீனிவாசன் சிறந்த சாஹித்யம் ஒன்று ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் மீது இயற்றி தானே அதை இசையமைத்துப் பாடி face book -இல் வெளியிட்டு உள்ளார். சாஹித்யமும் அர்த்த புஷ்டியுடன் இருந்தது. பாராட்டத் தகுந்த சேவை.

No comments:

Post a Comment