இந்திய அரசு சிறந்த இந்திய திரைப்படத்திற்கு "தங்க மயில்" என்ற பரிசை வழங்குகிறது. இது ஒரு பெருமைக்குரியாபரிசு. பெரும்பாலும் தென்னிந்திய திரைப் படங்களுக்கு இது கிடைத்தது இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்னால் "செம்மீன்" என்ற மலையாள படத்திற்கு கிடைத்தது. அதோடு சரி. இந்தத் தங்க மயில் பரிசு (சன்னத்) சிறந்த இயக்குனர் சிறந்த கதாசிரியர் சிறந்த பாடகர், அது போன்ற பல பரிசுகளை வாங்கிய திரைப்படத்திற்கு தரப்படுகிறது.
1978 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன் சங்கராபரணம் என்னும் தெலுங்கு மொழி திரைப்படம் வெளி வந்தது. இது தமிழ்நாடு, கர்நாடக, கேரளா மற்றும் வட மாநிலங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் கர்நாடக சங்கீதத்தின் மேன்மையையும் பாரம்பரியத்தையும் போற்றுவதாக அமைந்தது. இதற்க்கு கட்டாயம் தங்க மயில் பரிசு கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். சிறந்த பாடகர், சிறந்த பாடகி, சிறந்த கதை அமைப்பு போன்ற ஆறு பரிசுகள் இதற்குக் கிடைத்தது. ஆனாலும் தங்க மயில் பரிசு இதற்க்கு கிடைக்கவில்லை. இதனால் தென்னிந்திய தயாரிப்பாளர்கள் நடிகர்கள் இயக்குனர்கள் எல்லாரும் பலவிதமாக, பரிசுக்கு தேர்வு செய்பவர்களைத் திட்டித் தீர்த்தார்கள். பிறகு விசாரித்ததில் சிறந்த இசை அமைப்பாளர் என்ற பரிசும் கிடைத்திருந்தால் ஏழு பரிசுகள் கிடைத்து தங்க மயிலும் கிடைத்திருக்கும் என்று தெரிந்தது. ஏன் சிறந்த இசையமைப்பாளர் பட்டம் கிடைக்கவில்லை? பட்டி தொட்டி எல்லாம், கிராமத்து டீக்கடைகளில் எல்லாம் கூட மாநில மொழி பேதமின்றி ஸ்ரீ தியாகராஜரின் இனிமையான தெலுங்கு பாடல்கள் விரும்பி கேசட்டு போடப்பட்டது. அப்படியிருக்க அந்தஇசை அமைப்பாளருக்கு ஏன் பட்டம் கிடைக்கவில்லை என்று விசாரிக்கும்போது தேர்வு கமிட்டியில் ஒரு வோட்டு குறைவாகப போயிவிட்டதென்றும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர், நடிகர், இசையமைப்பாளர், மற்றும் இயக்குனரான திரு எஸ். பாலசந்தர் தனது வோட்டைப் போடவில்லைஎன்றும் தெரிந்தது. அவர் மிகச் சிறந்த வீணை வித்வான். கர்நாடக இசை மேதை. அவர் ஏன் தனது வாக்கைப் போடவில்லை?
திரைப்பட நடிகர் மகேந்திரன் சொன்னார். "இவர் போட்டிருக்கிறார் பாட்டு, நீயும் பொம்மை நானும் பொம்மை - அதற்குத் தான் கொடுக்க வேண்டும் பரிசை" என்று .
kindaladithaar. andhak kindalil oru unmai ullathu. andha paat
No comments:
Post a Comment