Tuesday, December 30, 2008

என் கேள்விகள் -- தொடர்ச்சி.

மன்னிக்கவும்.
என்று கிண்டலடித்தார். அந்தக் கிண்டலில் ஒரு உண்மை உள்ளது. அந்தப் பாட்டைக் கேட்டபிறகு பலருக்கு ஜேசுதாஸ் குரலே பிடிக்காமல் போய்விட்டது. அவர் பாட ஆரம்பித்தாலே நானும் பொம்மை பாட்டு நினைவுக்கு வந்துவிடுவதாக அவர்கள் சொன்னார்கள்.
சில வாரங்கள் கழித்து சென்னை கடற்கரை சாலையில் பாலச்சந்தரை நான் சந்தித்தேன். அது வரை நான் அவரைப் பார்த்தது கிடையாது. எனவே அவரை தாண்டிப் போய்விட்டேன். பிறகு சுதாரித்துக் கொண்டு திரும்பவும் வந்து, சார், நீங்கள் வீணை பாலச்சந்தர் தானே என்று கேட்டேன். அவர் நடந்து கொண்டே பேசுங்கள் என்றார். சங்கராபரணம் படத்தில் பாட்டு எல்லாம் நன்றாகத்தானே இருந்தது. "புரோசெவார் எவருரா" மானச சஞ்சர ரே இதெல்லாம் ரொம்ப பிரமாதமாகத் தானே இருந்தது?
அதற்கு அவர் "நீங்கள் கர்நாடக சங்கீதம் முறைப்படி பயிற்சிப் பெற்ற நல்ல வித்வான் யாரிடமாவது கேட்டுப் பாருங்கள். படத்தின் மையக் கருத்தான சாச்த்ரீயமான கர்நாடக சங்கீதத்தை உயர்த்திப் பிடிக்கும் கதா நாயகன் சங்கராபரணம் சங்கர சாஸ்த்ரி, ஒரே ஒரு பாட்டு இரண்டு நிமிடதிர்க்குக் கூட சம்ப்ரதாய சுத்தமாகப் பாடவில்லை. அந்த இசையமைப்பாளர் மகாதேவன் முறையாக சங்கீதம் கற்றவர். அவர் அதில் சினிமாத்தனம் செய்தது தவறு என்று பட்டது என்றார். அதற்கு மேல் அவரிடம் வாதம் செய்ய எனக்கு சரக்கு போதாது. எனவே உங்களை சந்தித்thaதில் மிக்க மகிழ்ச்சி என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

சினிமா பாட்டு பாடினால் அதற்கு (கர்நாடக சங்கீத) ராகம் சொல்கிறார்கள். அதை வைத்து பல எபிசோடு நிகழ்ச்சிகளும் நடத்துகிறார்கள். எடுத்துக் காட்டாக : தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி -- கீரவாணி
வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள் -- ஸ்ரீரஞ்சனி
ஒட்டகத்தைக் கட்டிக்கோ -- தர்மாவதி
என்று சொல்கிறார்கள். இந்தப் பாட்டை பாடிப் பார்த்தல் அந்த ராக பாவம் வரவே வராது. சினிமா இசையமைப்பாளர்களும், கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டுதான் எல்லா பாடல்களுக்குமே இசையமைப்பதாக கூறுகிறார்கள். ஆனால் பாலசந்தர் சொன்னதை வைத்துப் பார்த்தல் கர்நாடக சங்கீதத்தைக் கொண்டு இசையமைக்கிராரகளா கர்நாடக சங்கீதத்தைக் கொன்று இசையமைக்கிராரகளா என்று தெரியவில்லை.
சிந்து பைரவி என்று ஒரு படம் எடுத்தார்களே? அந்தப் படத்தின் "தீம்" தான் என்ன?

இது தான் என்னுடைய இன்றைய கேள்வி.

No comments:

Post a Comment